தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வாணி ராணி தொடர் நடிகைக்கு கரோனா! - Corona virus

பிரபல சின்னத்திரை நடிகையான நவ்யா சுவாமிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நவ்யா
நவ்யா

By

Published : Jul 2, 2020, 3:16 PM IST

கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் கரோனா தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி தொடர் மூலம் பிரபலமான, நவ்யா சுவாமிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு கடந்த மூன்று நான்கு நாள்களாக உடல் சோர்வு, தலைவலி இருந்தது. உடனே மருத்துவர் அறிவுரையின் அடிப்படையில் கரோனா பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இப்போது என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது எந்த அறிகுறிகளும் இல்லை. தைரியமாக இருக்கிறேன். நான் பணியாற்றிய சீரியல் படக்குழுவிற்கு இதுகுறித்து தெரிவித்துள்ளேன். அவர்களையும், தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details