தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகை நக்‌ஷத்ரா திருமண புகைப்படங்கள் -  வைரல்! - காதலரை மணந்த நக்ஷத்ரா

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான நக்‌ஷத்ரா தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/10-December-2021/13873858_marriage1.jpg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/10-December-2021/13873858_marriage1.jpg

By

Published : Dec 10, 2021, 11:09 PM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றியவர் நக்‌ஷத்ரா. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நாயகியாக நடிக்கிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான சேட்டை படத்தில் பிரேம்ஜிக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை நக்‌ஷத்ரா திருமண புகைப்படம்

அதன் பின்னர் வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, புலிவால், நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்டப் பல்வேறு திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். தற்போது ஹே சினாமிகா, வஞ்சகன், வணிகன் உள்ளிட்டப் படங்களிலும் நடித்து வருகிறார்.

நக்‌ஷத்ராவுக்கு கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று (டிசம்பர் 10) தனது நீண்ட நாள் காதலரான ராகவ்வை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை நக்‌ஷத்ரா திருமண புகைப்படம்

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்ற தனது திருமண புகைப்படங்களை, தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளார், நக்‌ஷத்ரா. இதனைக் கண்ட ரசிகர்கள் நக்‌ஷத்ராவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:'ஓ சொல்றியா... ஓ ஓ சொல்றியா...'; கவர்ச்சிப் புயலாய் மாறிய சமந்தா!

ABOUT THE AUTHOR

...view details