தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தடுப்பூசி போட்டும் கரோனா வந்துடுச்சு: புலம்பும் எவர்கிரீன் நாயகி நதியா - எவர்கிரீன் நாயகி நதியா

நடிகை நதியா கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகள் செலுத்திய பிறகும், தனக்குத் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நதியா
நதியா

By

Published : Aug 19, 2021, 7:56 AM IST

Updated : Aug 19, 2021, 8:37 AM IST

தமிழ் சினிமாவில் 90-ஸ் காலகட்டத்தில் முன்னணி நாயகியாக வலம்வந்தவர் நதியா. எவர்கிரீன் நாயகி நதியா இன்றுவரை பலரது ஃபேவரைட் பட்டியலில் உள்ளார். ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில், 'வயசானாலும் உன்னோட அழகும் ஸ்டைலும் இன்னும் ஒன்னவிட்டுப் போகல' என ஒரு வசனம் பேசியிருப்பார்.

அந்த வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, எவர்கிரீன் நாயகி நதியாவிற்குக் கச்சிதமாகப் பொருந்தும். இன்னும் இளைமையாக இவரிடம் தற்போது உள்ள காலகட்ட பெண்கள் பலரும் அழகை எப்படித் தக்கவைத்துக் கொள்வது என யோசனை கேட்டுவருகின்றனர்.

எவர்கிரீன் நாயகி நதியா

மும்பையில் வசித்துவரும் நதியா, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வுசெய்து நடித்துவருகிறார். அந்தவகையில் தற்போது, லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.

எவர்கிரீன் நாயகி நதியா

இன்னும் பெயரிடாத இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காகப் படக்குழு நதியாவை அழைத்துள்ளனர். அப்போது அவர் தனக்கும், வீட்டில் இருக்கும் அனைவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் நதியா நடிக்க வேண்டிய காட்சிகளை மட்டும் இயக்குநர் லிங்குசாமி தள்ளிவைத்துள்ளாராம்.

முன்னதாக அவர் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளும் எடுத்துக் கொண்டதாகத் சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார். அப்படி இருக்கையில் அவருக்குத் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் தொற்றிலிருந்து மீண்டுவர பிரார்த்தனை செய்வதாகத் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.

இதேபோல் நடிகை ஷெரினும் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகள் செலுத்திய பிறகு, தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகள் எடுத்துக் கொண்ட பிறகும், மக்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகும் சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:2 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஷெரின்

Last Updated : Aug 19, 2021, 8:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details