தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலிவுட்டில் அறிமுகமாகும் மேகா ஆகாஷ்! - sooraj pancholi

நடிகை மேகா ஆகாஷ் பாலிவுட்டில் அறிமுகமாகும் 'சாட்டிலைட் ஷங்கர்' திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கும் நிலையில், இன்று அப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Actress Megha Akash

By

Published : Oct 17, 2019, 11:58 PM IST

'பேட்ட', 'வந்தா ராஜாவாதான் வருவேன்', 'பூமராங்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்த நடிகை மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் வெளியாகயிருக்கும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மேகா ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.

'சாட்டிலைட் சங்கர்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் சூரஜ் பன்சோலிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இர்பான் கமல் இயக்கியிருக்கும் இப்படம், ராணுவ அலுவலரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

சாட்டிலைட் ஷங்கர்

இத்திரைப்படத்தை முராத் கெதானி, அஸ்வின் வர்தே சினி 1 ஸ்டுடியோஸின் கீழ் தயாரித்துள்ளனர். சந்தன் அரோரா எடிட்டிங்கில் இத்திரைப்படம் நவம்பர் 15ல் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க:மூன்றாவதாக இணையும் கெளதம் மேனன் - ஏ.ஆர். ரகுமான் வெற்றிக் கூட்டணி!

ABOUT THE AUTHOR

...view details