தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நள்ளிரவில் 6 பேருடன் எஸ்கேப்பான மீரா மிதுன் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

'பேய காணோம்' படப்பிடிப்பிலிருந்து திடீரென மீரா மிதுன் ஓடிய சம்பவம் படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீரா மிதுன்
மீரா மிதுன்

By

Published : Dec 14, 2021, 3:00 PM IST

நடிகர்கள், நடிகைகள் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி சிக்கிக் கொள்பவர் மீரா மிதுன். சமீபத்தில்கூட குறிப்பிட்ட சமுதாயத்தினர் குறித்து அவதூறாகப் பேசி கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியே வந்தார்.

இதனையடுத்து அவர் இயக்குநர் செல்வ அன்பரசன் இயக்கிவரும் 'பேய காணோம்' படத்தில் நடித்துவருகிறார். குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரித்துவரும் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் 'பேய காணோம்' படப்பிடிப்பிலிருந்து மீரா மிதுன் மாயமாகிவிட்டதாகப் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வாழ்க்கையில் பணத்தைக் காணோம், குழந்தையைக் காணோம், பொருளைக் காணோம், நண்பனைக் காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம்.

முதன்முதலாக ஒரு பேயைத் தேடுகிறார்கள். பேயை எதற்காகத் தேடுகிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் இது. 80 விழுக்காடு படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க கொடைக்கானல் வந்தோம்.

திடீரென மீரா மிதுன் நள்ளிரவில் ஆறு பேர் கொண்ட குழுவுடன் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். பேயைத் தேடப்போன நாங்கள், கதாநாயகியைத் தேட வேண்டியதாகிவிட்டது. இத்தனை தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை அவர் மதிக்காமல் சென்றுவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகைகள் கரீனா கபூருக்கும் அம்ரிதா அரோராவுக்கும் கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details