நெப்போட்டிஸம், காப்பி அடிக்கிறார்கள் என பல திரை நட்சத்திரங்கள் குறித்தும் சமீபத்தில் சூப்பர் மாடல் மீரா மிதுன் பல குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகிறார்.
தற்போது பிரதமர் மோடியிடம் முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியும் போன்ற சமூக வலைத்தளங்களை தடை செய்ய மீரா மிதுன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " நான் பல மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக், இன்ஸ்டாகிராமை புறக்கணித்துவிட்டேன். நான் யூடியுபில் எந்த சேனலையும் தொடங்கவில்லை. முன்னுதாரணமாக இருங்கள் மோடி. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியுப் ஆகிய மூன்றையும் புறக்கணியுங்கள்.
இவை அனைத்தையும் தடை செய்வது ஆகச் சிறந்தது. தற்போது பொருளாதாரப் போர் ஒன்று நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியர்களை வைத்துக்கொண்டு அமெரிக்கர்கள் பணம் சம்பாதிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஊடகங்கள் குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா. அதில், "தமிழ்நாடு ஊடகங்கள் முற்றிலும் போலியனவை. மக்களுக்கு பொய்யான அரசியல் தகவல்கள் அளிக்கப்படுகின்றன. திரையரங்குள் திறக்காதபோதே திரைப்பட வெளியிடு குறித்த செய்திகளால் மக்கள் திசைதிருப்பப்படுகின்றனர். பொருளாதார நெருக்கடி குறித்தும், அதை எப்படி சமாளிப்பது என்றும் பொதுமக்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க... கொலைக்கு துணிந்த 'பிக்பாஸ்' மீரா மிதுன்