சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'பேட்ட' படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். சசிகுமாரின் மனைவியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார்.
தமிழில் முதல் படத்திலேயே இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு, அவர் நடத்திய போட்டோ ஷூட்டும் காரணம் எனலாம். அதனால்தான் என்னவோ அதை இன்றும் விடாமல் செய்துவருகிறார்.
பேட்ட திரைப்படத்துக்கு பிறகு 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். சூப்பர் ஸ்டாருடன் முதல் படம், தளபதியோடு இரண்டாவது படம் என அவரது கிராஃப் ஏறியதால் பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது. இவர் தற்போது தனுஷின் ’மாறன்’, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.