ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகை மதுமிதா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின்போது பல கொண்டாட்டங்களும் நடக்கிறது, அசம்பாவிதங்களும் நடக்கிறது. சில இளைஞர்கள் புத்தாண்டைக் கொண்டாடவேண்டும் என்று எண்ணி, கண்மூடித்தனமாக மது அருந்திவிட்டு வேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாகிறார்கள்.
இளைஞர்களுக்கு நடிகை மதுமிதா கோரிக்கை - நடிகை மதுமிதா புத்தாண்டை முன்னிட்டு கோரிக்கை
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேகமாக வாகனங்கள் ஓட்டி விபத்துகள் ஏற்படுத்துவதை இளைஞர்கள் தவிர்க்கவேண்டுமென நடிகை மதுமிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
Actress Madhumitha advice for new year
அவர்களால் பல உயிரிழப்புகளும் நேரிடுகிறது. இந்த ஆண்டு விபத்துகள் நடக்கும் புத்தாண்டாக இருக்கக்கூடாது. புத்தாண்டை கொண்டாடும் ஒவ்வொருவரும் வரைமுறை வைத்துக்கொண்டு, சந்தோஷங்களை அளிக்கும் வகையில் புத்தாண்டை கொண்டாடவேண்டும் எனவும், இந்தப் புத்தாண்டு பலருக்கும் சந்தோஷம் அளிக்கும் கொண்டாட்டமாக அமையவேண்டும் எனவும் கூறி தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல் முழு நீள சிங்கிள் ஷாட் படம்! - அசரவைக்கும் பார்த்திபன்