தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கூடுதல் மொழியைக் கற்பதில் என்ன தீங்கு இருக்கிறது?' -லட்சுமி ராமகிருஷ்ணன் - ஹிந்திக்கு எதிராக போராட்டம்

இளைஞர்கள் இந்தியா முழுவதும் எங்கும் செல்வதற்கு உதவும் விதமாக இருப்பதற்கு கூடுதல் மொழியை கற்பதில் என்ன தீங்கு இருக்கிறது? இதற்காக போரடுவதற்குப் பதிலாக வட இந்தியர்கள் தமிழை மூன்றாவது மொழியாக கற்றுக்கொள்ள வலியுறுத்தலாம் என, ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

By

Published : Sep 19, 2019, 10:18 AM IST

சென்னை: ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை லட்சுமி ராமிகருஷ்ணன், அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவின் அம்மா நடிகையாக வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். பல ஹீரோ, ஹீரோயின்களின் அம்மாவாக தோன்றி ரசிகர்களை கவர்ந்த இவர் சொல்வதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார்.

மேலும், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித் ஷா, ஹிந்தி மொழியால் நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்று கருத்து தெரிவிந்திருந்தார். இது சர்ச்சையை கிளம்பிய நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இளைஞர்கள் இந்தியா முழுவதும் எங்கும் செல்வதற்கு உதவும் விதமாக இருப்பதற்கு கூடுதல் மொழியை கற்பதில் என்ன தீங்கு இருக்கிறது? இதற்காக போரடுவதற்கு பதிலாக வட இந்தியர்கள் தமிழை மூன்றாவது மொழியாக கற்றுக்கொள்ள வலியுறுத்தலாம். இது சிறந்த கலாச்சார பரிமாற்றமாக இருக்கும்.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடுபவர்களின் குழந்தைகள் தமிழ் மட்டும்தான் பேசுகிறார்களா? புதிய மொழியை கற்பதால் தங்களது தாய் மொழியின் மீதான பாசம் விலகிவிடுமா? தமிழ் மொழியை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறாக இயங்குகிறோம்.

நம் குழந்தைக்கு தேவையானது தரமான கல்வி, முழுமை பெற்ற பாடத்திட்டம், திறந்த மனநிலை மற்றும் நம்பிக்கை. இதனை பெற்றுவிட்டால் எது சரி, தவறு என்று அவர்களுக்கு தெரியும். ஆனாலும் பெற்றோராக நாம் அவர்களுக்கு நமது கலாச்சாரம், பாரம்பரியம், தமிழ் இலக்கியங்கள் குறித்து கற்பித்தல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details