தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
திருச்சியில் குஷ்பு ரசிகர்கள் இவருக்கு என கோயில் கட்டி அசத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் தற்போது வெள்ளித்திரை, சின்னத்திரையில் கொடிகட்டிப் பறந்து வருகிறார். அதேபோல் அரசியலில் படு பிஸியாக செயல்பட்டு வரும் இவர் தற்போது நடிகர் ரஜினியுடன், 'அண்ணாத்த' படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு, உடல் எடையைக் குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், "கடின உழைப்பு முடிவுகளை அளிக்கும்போது வரும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், ”சின்ன தம்பி குஷ்பு படத்தில் இருப்பது போல் மாறிவிட்டீர்கள்” என கமெண்ட் செய்துள்ளனர். அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் உருவாகியுள்ள 'ஷித்தி'