தமிழ் சினிமாவில் 80, 90களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துவருகிறார். இவருக்கும், நடிகரும், இயக்குநருமான சுந்தர். சி-க்கும் 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இதற்கிடையில் சுந்தர். சி- குஷ்பு காதலித்து இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகியுள்ளதாம். இதுகுறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”25 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் நீங்கள் என்னிடம் காதலை வெளிப்படுத்தினீர்கள். இத்தனை ஆண்டுகளில் இந்தப் புகைப்படங்களைத் தவிர வேறு ஒன்றும் மாறவில்லை. உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். இன்றும் உங்கள் கண்களைப் பார்த்தால் நான் வெட்கப்படுகிறேன். எனக்கு எல்லாமே நீங்க தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.