கரோனா தொற்றை வெல்லும் ஆயுதமாக கரோனா தடுப்பூசி மட்டுமே உள்ளது. இதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கீர்த்தி சுரேஷ்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று (மே.22) கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.
Keerthy
அந்த வகையில், தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் இன்று (மே.22) கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.