தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் தல-தளபதியின் முதல் நாயகி! - விஜய்யின் முதல் படம்

விஜய்யின் முதல் படமான 'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

c
Ajith

By

Published : Oct 1, 2021, 2:09 PM IST

Updated : Oct 1, 2021, 3:08 PM IST

தமிழ் சினிமாவில் 1984ஆம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் வெளியான 'வெற்றி' படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமானார்.

அதன் பின் 'குடும்பம்', 'நான் சிகப்பு மனிதன்', 'வசந்தராகம்', 'சட்டம் ஒரு விளையாட்டு', 'இது எங்கள் நீதி' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்தார்.

நடிகை கீர்த்தனா

அதன்பின் 1992ஆம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' என்றபடத்தில் விஜய் நடிகராக அறிமுகமானார். அப்போது அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தனா நடித்தார்.

இதன் மூலம் விஜய்க்கு நாயகியாக நடித்த முதல் நாயகி என்ற பெருமை கீர்த்தனாவுக்கு உண்டு. இதனையடுத்து கீர்த்தனா அஜித்துடன் 'மைனர் மாப்பிள்ளை', 'பவித்ரா' ஆகிய படங்களில் நடித்தார்.

நடிகை கீர்த்தனா

இப்போது தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் - அஜித்துடன் கீர்த்தனா ஆரம்ப காலத்தில் நாயகியாக நடித்துள்ளார். அதன் பின் கீர்த்தனாவுக்கு சரியான படவாய்ப்புகள் அமையாதால் சினிமாவில் விலகியிருந்தார்.

நடிகை கீர்த்தனா

இந்தநிலையில், மீண்டும் கீர்த்தனா சினிமாவில் கால்பதிக்கவுள்ளார். அவர் நடிக்க இருக்கும் படம் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

இதையும் படிங்க: தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு!

Last Updated : Oct 1, 2021, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details