தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மகனைப் பறிகொடுத்த 12 நாள்களில் கணவரையும் இழந்த சீரியல் நடிகை - சீரியல் நடிகை கவிதா

நடிகை கவிதாவின் மகன் உயிரிழந்து 12 நாள்களே ஆன நிலையில் அவரது கணவரும் நேற்று (ஜூன் 29) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கவிதா
நடிகை கவிதா

By

Published : Jun 30, 2021, 9:18 AM IST

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள், தொடர்களில் நடித்துவருபவர் கவிதா. தமிழில் தற்போது ஒளிபரப்பாகும் 'என்றென்றும் புன்னகை' தொடரில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இவரது கணவர் தசரத ராஜ், மகன் சாய் ரூப் ஆகியோருக்கு சமீபத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாய் ரூப், சிகிச்சைப் பலனின்றி கடந்த 12 நாள்களுக்கு முன்பு (ஜூன் 17) உயிரிழந்தார்.

நடிகை கவிதாவின் கணவர்

இந்நிலையில் மகன் இறந்த 12 நாள்களிலேயே கவிதாவின் கணவர் தசரத ராஜும் சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஜூன் 29) உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஓடிடியில் வெளியாகிறதா 'சார்பட்டா' திரைப்படம்?

ABOUT THE AUTHOR

...view details