இலங்கையின் எட்டாவது அதிபராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச நேற்று பதவியேற்றுக்கொண்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும் மறைந்த முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவைவிட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்தை தவிர பிற பகுதிகளில் கோத்தபய ராஜபக்சவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. தமிழர்களைக் கொத்துக்குண்டுகளுக்கு இரையாக்கி இனப்படுகொலை செய்த அன்றைய மகிந்த ராஜபக்ச அரசின் தொடர்ச்சியாகவே தற்போது வெற்றி பெற்றிருக்கும் அரசை தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.
ராஜபக்சவின் குடும்பத்திலிருந்து மீண்டும் ஒரு ஆட்சியாளரா என்ற கடும் கோபத்திலேயே தமிழ்ச் சமூகம் இன்று புதியதாக அமைந்திருக்கும் இலங்கை அரசை பார்க்கிறது.
இதனிடையே நேற்று அந்நாட்டின் எட்டாவது அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்றுக்கொண்டார். இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கண்டு கொந்தளிக்கும்விதமாக நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.