தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரஜினியை கலாய்த்த கஸ்தூரி! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட கருத்தை கலாய்த்து கஸ்தூரி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்- கஸ்தூரி
ரஜினிகாந்த்- கஸ்தூரி

By

Published : Jul 2, 2020, 4:07 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் காவல் துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "தந்தையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையையும், பேசிய பேச்சையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடவேக்கூடாது என்று குறிப்பிட்டும் தான் கோபமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

ரஜினிகாந்தின் இப்பதிவிற்கு வழக்கம்போல், ஆதரவுகளும், எதிர்ப்புகளும் எழுந்தன. இதனிடையே நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருவேளை ஃபோட்டோகிராபர் இன்றுதான் கிடைத்தார் போல்” என ட்வீட் செய்துள்ளார்.

இவர் ரஜினிகாந்துக்குதான் மறைமுகமாக கலாய்த்து பதிவை வெளியிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details