தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நான் கிழவி என்றால் அஜித் யார்?' - அஜித் ரசிகர்களை சாடிய கஸ்தூரி! - Latest cinema news

நடிகை கஸ்தூரி, அஜித் ரசிகர்களை சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kasthuri
Kasthuri

By

Published : Aug 3, 2020, 3:30 PM IST

Updated : Aug 3, 2020, 5:05 PM IST

நடிகை கஸ்தூரிக்கும், அஜித் ரசிகர்களுக்கும் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் தகராறு நடைபெறுகிறது. அந்த வகையில், தற்போது அஜித் ரசிகர்கள் நடிகை கஸ்தூரியை மீண்டும் சீண்டியுள்ளனர்.

ஆம்... நடிகர் பிரபுவுடன், கஸ்தூரி நடித்த பழைய வீடியோ ஒன்றைப் பதிவு செய்த அஜித் ரசிகர், "இது நம்ம கஸ்தூரி கிழவி தானே... அந்த காலத்தில் சரியான அழகியாக இருந்திருப்பார் போல" என்று பதிவு செய்துள்ளார். மேலும் அப்பதிவினை கஸ்தூரிக்கும் டேக் செய்துள்ளார்.

இதைக்கண்டு கடுப்பான நடிகை கஸ்தூரி, "எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பிழைப்பு உங்களுக்குத் தேவையா? அஜித் அவர்கள் கேட்டாரா... அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதுல காமெடி என்னன்னா, கஸ்தூரி "கிழவி" அஜித்தை விட ஐந்து வயது குறைந்தவர்" என்று, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு ட்விட்டர் பதிவில், "இதுபோன்ற மோசமான பதிவுகளைச் செய்து, அஜித்தின் உண்மையான ரசிகர்களைக் களங்கப்படுத்த வேண்டாம். ஏனென்றால் அவர் ஒரு ஜென்டில் மேன். அவரை தான் மிகவும் மதிக்கின்றேன். அஜித் ரசிகர்கள் அவரை பெருமைப்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Aug 3, 2020, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details