தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரஜினி எப்படி அமெரிக்கா சென்றார்: சர்ச்சையை கிளப்பும் கஸ்தூரி - கஸ்தூரி

ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி சரமாரி கேள்விகளை எழுப்பி வருகிறார்.

Actress kasthuri criticizes rajinikanth america trip
Actress kasthuri criticizes rajinikanth america trip

By

Published : Jun 28, 2021, 5:03 PM IST

கரோனா சூழலில் ரஜினி அமெரிக்கா சென்றுள்ளது குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர், மே மாதம் முதல் இந்திய குடிமகன்கள் நேரடியாக அமெரிக்கா பயணிப்பதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. ரஜினிகாந்த் மட்டும் எப்படி அமெரிக்கா சென்றார். இதற்கு விளக்கம் கொடுங்கள் ரஜினி என கேட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் படிக்கும், வாழும் என்ஆர்ஐகளுக்கு மட்டுமே அமெரிக்கா செல்ல அனுமதி உள்ளது. எனவே ரஜினியின் அமெரிக்க பயணம் புரியாத புதிராக இருக்கிறது. அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பதாக சொல்கிறார்கள். இந்தியாவில் இல்லாத சிகிச்சை அப்படி என்ன அமெரிக்காவில் இருக்கிறது. மாயோ கிளினிக் இதயக் கோளாறு தொடர்பான நோய்களுக்கு பேர் போன மருத்துவமனை. நான் நினைத்தது விட மோசமானதாக இந்த பிரச்னை இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

kasturi tweet

ரஜினி ரசிகர்கள் பேஸ்புக்கில் கஸ்தூரியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்திலும் இதுகுறித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.

இதையும் படிங்க:கானா, ஸ்பாட்டிஃபையில் மாஸ்டர் புதிய சாதனை!

ABOUT THE AUTHOR

...view details