கரோனா தொற்று காரணமாக பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகமாகிவருகிறது; இதற்குத் திரை பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில் மின்சாரக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகப் பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
'கோ' பட நடிகையான கார்த்திகா தனக்கு அதிகமாக மின்கட்டண ரசீது வந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவரது ட்விட்டரில், "என்ன மாதிரியான ஊழலை அதானி மின்சார நிறுவனம் மும்பையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது? என்னுடைய ஜூன் மாத மின்சாரக் கட்டணம் ஒரு லட்ச ரூபாய் வரை உள்ளது.