சமீப காலமாகக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிகர் கார்த்தி நடித்துவருகிறார். அந்தவரிசையில் இவர் தற்போது, சுல்தான் படத்தை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கிவரும் சர்தார், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில், வந்தியத்தேவனாக நடித்து வருகிறார்.
இவரது அடுத்த படத்தை கொம்பன் பட இயக்குநர் முத்தையா இயக்குகிறார். இதில் ராஜ் கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆகியோர் நடிக்க இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
விருமன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிக்கிறார். இந்த படம் அவர் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.