சென்னை: 'குலேபகாவலி' படத்தைத் தொடர்ந்து கல்யாண் இயக்கும் புதிய படம் 'கோஸ்டி'. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவருடன் கே.எஸ். ரவிக்குமார், சுப்பு பஞ்சு அருணாசலம், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சத்யன், ஊர்வசி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், லிவிங்ஸ்டன், மதன்பாபு, சந்தான பாரதி, நரேன், தங்கதுரை உள்ளிட்டப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை தமன்னா வெளியிட்டிருந்தார்.
கோஸ்டி படத்தின் அனைத்துக் காட்சிகளும் பொது முடக்கத்திற்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் ஒரு சில காட்சிகளும், புரோமா பாடல்களும் மட்டும் பொது முடக்கம் காரணமாக எடுக்க முடியாமல் போனது.
தற்போது படப்பிடிப்பிற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதையடுத்து கோஸ்டி படக்குழுவினர் எஞ்சியிருந்த காட்சிகளை எடுத்து முடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகளில் கோஸ்டி படக்குழுவினர் ஈடுபடவுள்ளனர். முழுப்படப்பிடிப்பையும் முடித்ததில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.
இதுகுறித்து கோஸ்டி படத்தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெயராம் கூறுகையில், 'உண்மையில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் படமான 'கோஸ்டி' படப்பிடிப்பு முடிந்ததால் மட்டுமல்ல, மொத்த திரைத்துறையும் மீண்டும் பணிகளை ஆரம்பித்திருப்பது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.