தமிழ்த் திரையுலகில் 'திரு திரு துரு' படம் மூலம் அறிமுகமானவர், ஜனனி ஐயர். இதனையடுத்து 'தெகிடி' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் அவர் இடம்பிடித்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான பட வாய்ப்புகள் ஜனனியைத் தேடி வந்தது.
பெயரிலிருந்து சாதிப் பெயரை நீக்கிய ஜனனி - குவியும் பாராட்டுகள் - latest kollywood news
சென்னை: நடிகை ஜனனி தனது பெயரிலிருந்து சாதி அடையாளத்தை நீக்கியதற்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
ஜனனி
இந்நிலையில் நடிகை ஜனனி ஐயர் தனது பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை நீக்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மாற்றம் ஒன்றே மாறாதது என்றும் ஒற்றுமையுடன்' எனக் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த மாற்றத்துக்குப் பலரும் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.