தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் நடித்துவந்த அமலா பால் தமிழில் ’கேடி’ படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து விஜய்யுடன் ’நண்பன்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் இவரது மாமா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “உங்களின் அதிகமான படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் இருந்திருக்க வேண்டும். நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்பதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு தெரிந்தவரை நீங்கள் தான் மிகவும் நல்ல மனிதர்.