தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மின் கட்டணத்தை பார்த்து அதிர்ந்துபோன காலா பட நடிகை - ஹூமா குரேஷி வீட்டு மின்சார கட்டணம்

காலா பட நடிகை ஹூமா குரேஷி தனது வீட்டிற்கு ரூ.50 ஆயிரம் மின்சாரக் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Huma
Huma

By

Published : Jun 30, 2020, 5:11 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகமாகி வருகிறது. இதற்கு திரைப் பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. ஆனால், இதுபோன்ற சூழ்நிலையில் மின்சாரக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், காலா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான ஹூமா குரேஷி, தனது வீட்டிற்கு எப்போதும் வரும் மின்சாரக் கட்டணம் இந்த முறை அதிகமாக வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதாவது, தன்னுடைய வீட்டிற்கு ஆறாயிரம் ரூபாய் மட்டுமே மின்கட்டணம் செலுத்தி வந்ததாகவும், தற்போது ரூ.50 ஆயிரம் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஹூமா வெளியிட்ட ட்விட்டர் பதிவு

முன்னதாக, இதேபோன்று நடிகர் பிரசன்னா, நடிகை டாப்சி, நடிகை கார்த்திகா நாயர் ஆகியோரும் தங்களது வீட்டில் மின்சாரக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக குற்றஞ்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒரு மாதத்துக்கு மின்கட்டணம் ஒரு லட்சம் ரூபாயா? - கலங்கிப்போன கார்த்திகா

ABOUT THE AUTHOR

...view details