தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘பொன்மகள் வந்தாள்’ படத்தைப் பாராட்டிய ஹன்சிகா! - சினிமா செய்திகள்

நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை பாராட்டி ஹன்சிகா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress hansika praised jothika ponmagal vandhal movie
Actress hansika praised jothika ponmagal vandhal movie

By

Published : Jun 2, 2020, 3:53 AM IST

நடிகை ஜோதிகா நடிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக் இயக்கத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்‘. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியானது.

பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஹன்சிகா ‘பொன்மகள் வந்தாள்‘ படத்திற்கு பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பொன்மகள் வந்தாள் திரைப்படத்தைப் பார்த்தேன். என்ன ஒரு அருமையாக எழுதப்பட்ட கதை. கடைசி காட்சி வரை என்னை பிடிப்புடன் வைத்துக்கொண்டது. திரைக்கதை மிகவும் பாராட்டுக்குரியது.

ஜோதிகா தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் இப்படத்தை பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். ஹன்சிகாவின் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

...view details