தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிங்கிள் ஷாட்... சிங்கிள் நாயகி: ஹன்சிகாவின் புதிய படம் ஆரம்பம் - ஹன்சிகாவின் புதியப்படம்

ஒரே ஷாட்டில் ஒரே கதாபாத்திரத்தை வைத்து எடுக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் ஹன்சிகா நடிக்கிறார்.

hansika
hansika

By

Published : Jul 20, 2021, 4:43 PM IST

சினிமாவில் ஒரே ஷாட்டில் ஒரு முழு நீளப்படத்தை எடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். தமிழிலும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பார்த்திபன் நடிப்பில் பல விருதுகளை வாங்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படத்தில் அவர் மட்டுமே நடித்தார். ஆனால் இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் இல்லை.

இந்நிலையில், தெலுங்கில் ராஜா தூஸா (Raja Dussa) இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் 'ஒன் நாட் ஃபைவ் மினிட்ஸ் (105)' என்னும் படம் உருவாகவுள்ளது. இப்படத்தை பூமாக் சிவா தயாரிக்கிறார்.

சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகும் இப்படம் ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையம்சத்தை மையமாகக் கொண்டுள்ளது. இப்படத்தில் ஹன்சிகாவைத் தவிர வேறு யாரும் நடிக்கவில்லை. 105 நிமிடங்கள் ஹன்சிகா தனிமையில் அந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து படமாக உருவாகிறது.

'ஒன் நாட் ஃபைவ் மினிட்ஸ் (105)' படத்தின் மூலம் தெலுங்கில் ஒரே ஷாட்டில் ஒரே கதாபாத்திரம் நடிக்கும் படம் என்ற சாதனையைப் படைக்கவுள்ளது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் தான் கலந்துகொண்டுள்ளதாக ஹன்சிகா அவரது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தெலுங்கில் பிஸியாகும் ஹன்சிகா

ABOUT THE AUTHOR

...view details