தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் எமி ஜாக்சன். அதன்பின் தெறி, ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவரும் லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனாயோட்டோ என்பரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் எமி.
'தாய்மையின் அழகியலை வெளிப்படுத்திய எமி ஜாக்சன்' - புகைப்படம் - தாய்மை
குழந்தையை மிகவும் எதிர்நோக்கிக் காத்திருப்பதாகக் கூறியுள்ள எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
தற்போது லண்டனில் தங்கியுள்ள எமி ஜாக்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேறு காலம் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மேலாடையின்றி இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னரும் டாப் லெஸ் புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தாலும், அவை அனைத்தும் கவர்ச்சிப் படங்களாகவே பார்க்கப்பட்டன. ஆனால் இப்போது பதிவிட்டுள்ள டாப் லேஸ் புகைப்படம் தாய்மையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாகப் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பதிவில் எமி ஜாக்சன் கூறியிருப்பதாவது, பிறக்கப்போகும் குழந்தைக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்ப்பமடைந்து 33 வாரங்கள் நிறைவடைந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.