தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓவியராகக் கலக்கும் அஜித் மச்சினிச்சி..! - நடிகை ஷாமிலி

ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டைக் கலக்கியவர் பேபி ஷாமிலி. தற்போது ஓவியத்துறையில் கால்பதித்திருக்கும் நடிகை ஷாமிலியின் ஓவியங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

actress-baby-shamlee

By

Published : Oct 28, 2019, 10:32 AM IST

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி. இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜநடை திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தொடர்ந்து அஞ்சலி, துர்கா, தைப்பூசம், தேவர் வீட்டுப்பொண்ணு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 90ஆம் ஆண்டு காலகட்டங்களில் பேபி ஷாமிலியாக வலம் வந்தார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த அஞ்சலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார்.

பேபி ஷாமிலி

2009இல் வெளியான ஓயே என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி 2016இல் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வீரசிவாஜி படத்தில் நடித்திருந்தார்.

ஷாலினியுடன் ஷாமிலி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து வரும் ஷாமிலி, நடிப்பு மட்டுமல்லாது மாடலிங், ஓவியம் உள்ளிட்ட துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஓவியத்துறையில் சமீபகாலமாக ஆர்வம்காட்டிவரும் ஷாமிலி, புகழ்பெற்ற ஓவியர் ஏ.வி. இளங்கோவிடம் பயிற்சிபெற்று வருகிறார். தற்போது இவர் வரைந்துள்ள ஓவியங்கள் பெங்களூருவில் நடைபெற்றுவரும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஷாமிலியின் கைவண்ணம்

அரைநிர்வாணமாக இருக்கும் பெண்களின் படங்களை ஆயில் பெயிண்டிங் மூலம் தீட்டி தனது கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். இந்த ஓவியம் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இதனை பல்வேறு தரப்பினரும் பாரட்டியதோடு, சில விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

இதையும் படிங்க...

'சிங்கம்' வில்லனை கைது செய்த காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details