கொச்சி: பிரபல நடிகை 2017ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் காரில் கடத்தப்பட்டார். காருக்குள் நடிகையிடம் சிலர் அத்துமீறி நடந்து (Actress assault case) துன்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது நடிகர் தீலிப் உள்பட 8 பேர் மீது இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, நடிகர் திலீப் தொடர்பான சில ஆடியோக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது நடிகர் திலீப்பை கைதுசெய்து விசாரிக்க காவலர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.