'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' அனுஷ்கா வைரல் புகைப்படம்! - sago movie
நடிகை அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
1
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் அனுஷ்கா. இவர், இஞ்சி இடுப்பழகி படத்தின் கதாப்பாத்திரத்திற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டார். இருப்பினும் அவரால் பழைய தோற்றத்தை முழுமையாக பெற முடியவில்லை. 'பாகுபலி' படத்தில் மிகவும் ஒல்லியாக காண்பிக்கப்பட்டார். அதில் இவரை ஒல்லியாக காட்டுவதற்காகவே ஸ்பெஷல் எபெக்ட் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்படத்தைத் தொடர்ந்து 'சாஹோ' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் உடல் எடையை குறைப்பதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய பின் அனுஷ்கா புதிய போட்டோ சூட் ஒன்றை நடத்தி, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.