தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிகாரில் ஆசிரியராகிறாரா அனுபமா? அரசு சான்றிதழால் குழப்பம் - Anupama in STET Exam results

பிகாரில் ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் நடிகை அனுபமா புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுபமா
அனுபமா

By

Published : Jun 25, 2021, 10:09 AM IST

பிகார் மாநிலத்தில் அரசு வழங்கியுள்ள சான்றிதழ் ஒன்றில், நடிகை அனுபமா புகைப்படம் இடம்பெற்றுள்ள சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியாகின.

அனுபமா ஆசிரியராகிறாரா?

அதில் ஏற்பட்ட சில தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக அறிவியல் உள்ளிட்ட நான்கு பாடங்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தன.

இந்நிலையில் அப்பாடங்களின் மதிப்பெண்கள் சமீபத்தில் அம்மாநில அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதில், ரிஷிகேஷ் குமார் என்ற மாணவரின் மதிப்பெண் சான்றிதழில் அவரின் புகைப்படத்திற்குப் பதிலாக நடிகை அனுபமா பரமேஷ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

அரசு சான்றிதழில் அனுபமா

அரசு சான்றிதழில் சன்னி லியோன்

இதேபோல், கடந்தாண்டு அம்மாநில பொதுச் சுகாதார பொறியியல் துறையின் தகுதிப் பட்டியலில் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

அரசு வெளியிடும் சான்றிதழ்களில் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுவருவது அரசு அலுவலர்களின் அலட்சியத்தை வெளிக்காட்டுகிறது என சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:நயன்தாராவை எதிர்க்கும் 'நானி' பட பிரபலம்?

ABOUT THE AUTHOR

...view details