தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உங்களை செல்வந்தராக உணரவைப்பது பயணங்கள் மட்டுமே - டிராவல் மோடில் அஞ்சலி - நடிகை அஞ்சலி புகைப்படம்

ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக தவறாமல் தொடர்ந்து ஏதாவது அப்டேட் அளித்துவரும் நடிகை அஞ்சலி, தனது பயண செல்ஃபி வீடியோ ஒன்றை தத்துவத்துடன் பதிவிட்டுள்ளார்.

நடிகை அஞ்சலி

By

Published : Oct 18, 2019, 8:16 PM IST

Updated : Oct 18, 2019, 8:33 PM IST

வெளிநாடு டூர் சென்றுள்ள நடிகை அஞ்சலி, செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஞ்சலி நடிப்பில் இந்த ஆண்டு பேரன்பு, லிசா, சிந்துபாத் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நாடோடிகள் 2, நிசப்தம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகிவரும் நிலையில், கணிசமான படங்கள், வெப்சீரிஸ் தொடர்களிலும் கமிட்டாகியுள்ளார்.

இதில் ஒவ்வொன்றிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் அஞ்சலி, தற்போது வெளிநாடு சென்றுள்ளார். இந்தப் பயணம் ஷுட்டிங்குக்காகவா அல்லது விடுமுறைக்காகவா என்பது தெரியவில்லை.

ஆனால் டூர் சென்ற இடத்தில் செல்ஃபி வீடியோ ஒன்றை எடுத்துள்ள அவர், பயணங்கள் மட்டுமே உங்களைச் செல்வந்தராக உணரவைக்கிறது என்று தத்துவ மழை பொழிந்துள்ளார்.

அழகான வெள்ளை ஹாட், கவுண் அணிந்து, கூலிங் கிளாஸுடன் இந்த வீடியோவில் க்யூட்டாக உள்ளார் அஞ்சலி.

Last Updated : Oct 18, 2019, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details