தமிழ் சினிமாவில் கதாநாயகி, வில்லி, பாடகி என பன்முக தேற்றத்தில் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது 'அரண்மணை 3', 'பிசாசு 2', 'கா', 'வட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.ஆண்ட்ரியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நடிகை ஆண்ட்ரியாவுக்கு கரோனா! - நடிகை ஆண்ட்ரியாவுக்கு கரோனா
சென்னை: நடிகை ஆண்ட்ரியாவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியதாவது, " கடந்த வாரம் எனக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. வீட்டில் தனிமையில் உள்ளேன். உடல் நலம் தேறி வருகிறது. சமூகவலைதளங்களில் இருந்து சிறிது இடைவேளை.
உடல்நலக்குறைவுடன் உள்ள இச்சமயத்திலும் கரோனாவுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருக்கும் போது என்ன எழுதுவது என்று தெரியவில்லை. என்ன சொல்வதென்று தெரியாத தருணங்களில் எப்போதும் மனத்திலிருந்து பாட ஆரம்பித்துவிடுவேன். அதுவே எல்லாவற்றையும் சொல்லி விடும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும். இந்த தொற்று காலம் முடிந்து நாம் மீண்டும் சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.