தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை சுமலதா. இவர், நடிகர் ரஜினி, மம்மூட்டி, கமல் ஹாசன் உள்ளிட்ட உச்ச நச்சத்திரங்களுடன் நடித்து புகழ்பெற்றவர். இவரது கணவர் நடிகர் அம்பரீஷ் காங்கிரசில் இணைந்து அமைச்சராகவும் எம்பியாகவும் இருந்தவர். இவர் 2018இல் மாரடைப்பால் இறந்தார்.
இதையடுத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனது கணவர் வெற்றிபெற்ற தொகுதியான மாண்டியாவில் போட்டியிட நடிகை சுமலதா வாய்ப்பு கேட்டார். ஆனால், அதற்கு காங்கிரஸ் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
அங்கு போட்டியிட கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கு சீட் வழங்கியது காங்கிரஸ். இதன் காரணமாக, அங்கு சுயேச்சையாகக் களமிறங்க முடிவுசெய்தார். இவருக்கு பாஜகவிடமிருந்து ஆதரவு கிடைத்தது.