1986ஆம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் இயக்கி நடித்த 'மைதிலி என்னை காதலி' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அமலா. இவர், 'வேதம் புதிது', 'இது ஒரு தொடர் கதை', 'கொடி பறக்குது', 'சத்யா', 'மாப்பிள்ளை', 'வெற்றிவிழா' உள்ளிட்ட 28 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இறுதியாக 1991ஆம் ஆண்டு வெளியான 'கர்பூர முல்லை' படத்தில் நடித்தார்.
தொடர்ந்து, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்ட பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
மேலும், தமிழ் தவிர சில ஆண்டுகளாக தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துவரும் அமலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கவிருக்கிறார்.
ஷர்வானந்த், ரிது வர்மா, அமலா உள்ளிட்டோர் நடிக்கும் புதுப்படம் தற்போது தெலுங்கு, தமிழ் மொழிகளில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதுப்படத்தில் நடிக்கவிருக்கிறார். ஷர்வானந்த், ரிது வர்மா நடிக்கும் இப்படத்தில், ஷர்வானந்துக்கு அம்மாவாக அமலா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார். இதன்மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அமலா ரீ என்ட்ரி ஆவது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க...
மீண்டும் தல அவதாரம் எடுக்கும் தெலுங்கு 'பவர் ஸ்டார்'