தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெப் சீரிஸில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும் அமலா!

ரஜினி, கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை அமலா, தெலுங்கு வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

வெப் சீரிஸில் நடிக்கும் அமலா

By

Published : Apr 8, 2019, 3:40 PM IST

தமிழ் சினிமாவில் 80 காலக்கட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை அமலா. அவரின் குடும்பபாங்கான முகமும், வசீகரிக்கும் அழகும், தேர்ந்த நடிப்பும் 80 மற்றும் 90களில் ரசிகர்களை கட்டிப்போட வைத்தது. மெல்ல திறந்தது கதவு படத்தில் வெறும் கண்ணை மட்டுமே காட்டி, நடிகர் மோகனை போல நம்மையும் ஏங்க வைத்தவர் நடிகை அமலா. சத்யா படத்தில் கமலுடன் செல்லக் கோபத்துடன் அமலாவின் ரொமான்ஸ் செய்யும் 'வளையோசை கல கல' எனும் பாடல், இப்போதும் யூ-டியூப்பில் அதிகம் பார்க்கப்படும் பாடலாக உள்ளது.

அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபுவை துரத்தி துரத்தி காதலிக்கும் விளையாட்டு பெண்ணாகவும், வேலைக்காரன் படத்தில் குடும்ப பொறுப்பை தன் தோளில் சுமக்கும் பெண்ணாகவும் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார் அமலா. இந்நிலையில் தெலுங்கு நடிகரான நாகர்ஜூனை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். பின்பு விலங்குகளின் நலனில் அவர் அக்கறை செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளம், தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார். தமிழ் படங்கள் எதிலும் அவர் நடிக்காமல் உள்ளார்.

தற்போது அமலா புதிய அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில் உருவாகும் "High Priestess" எனும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார் அமலா. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் அமலா நடிக்கிறார். மேலும் நடிகர் கிஷோர், பிரம்மாஜி, வரலக்ஷ்மி சரத்குமார், சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த வெப் சீரிஸை ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார். புஷ்பா இக்னாஷியஸ் இயக்கியிருக்கிறார். இந்த வெப்சீரிஸ் வரும் ஏப்ரல் 25 முதல் ZEE5 வலைத்தளத்தில் ஒளிபரப்பாகிறது. வெப் சீரிஸின் பர்ஸ்ட்லுக் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து நடிகர் கிருஷ்ணா கூறுகையில், "வெப் சீரிஸ், டிஜிட்டல் ஒரிஜினல்ஸ் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்த உள்ளேன். தெலுங்கில் உருவான என்னுடைய முதல் தயாரிப்பான "High Priestess" என்ற வெப் சீரிஸ் மிகச்சிறப்பாக வந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details