இந்தியாவில் தற்போது கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் லும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கரோனாவிலிருந்து காக்க அனைவரும் தடுப்பூசி போடுங்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் படங்கள்
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று (ஜூன் 1) செலுத்திக்கொண்டார்.
அந்த வகையில் கடந்த சில நாள்களாக திரை பிரபலங்கள் பலர் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஜூன் 1) நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கோவிஷீல்டு முதல் டோஸை எடுத்துக்கொண்டார். தடுப்பூசி போடும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அனைவரும் தடுபபூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.