தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமலா பால்...சிருஷ்டி டாங்கே....இவர்கள் வரிசையில் ஆடையில்லாமல் நடித்தாரா 'பப்ஜி' ஐஸ்வர்யா தத்தா - ஐஸ்வர்யா தத்தா பப்ஜி

நடிகை ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் பப்ஜி படத்தின் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Aishwarya dutta
Aishwarya dutta

By

Published : Jan 31, 2020, 7:39 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு மக்களுக்கு மிகவும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தற்போது 'தாதா 87' பட இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு படக்குழு 'பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி)' என்று பெயரிட்டுள்ளது. இப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர். நடிகர் மொட்டை ராஜேந்திரன் குற்றப் பிரிவு உயர் அலுவலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இதனையடுத்து நேற்று இதன் படப்பிடிப்பின் போது ஐஸ்வர்யா தத்தா நிர்வணமாக ஒரு காட்சியில் நடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கதைக்கு நிர்வாண காட்சி தேவைப்பட்டதால் எடுக்கப்பட்டதாகவும் அதற்கு தைரியமாக சம்மதித்து ஒத்துழைத்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு படக்குழு நன்றி தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன் 'ஆடை' படத்தில் அமலா பால் ஆடையின்றி நடித்த காட்சி பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதைத் தொடர்ந்து சேரன் நடிப்பில் வெளியான 'ராஜாவுக்கு செக்' படத்தில் நடிகை சிருஷ்டி டாங்கே ஒரு காட்சியில் ஆடையில்லாமல் நடித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details