தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா வைரஸிலிருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா அர்ஜுன்! - கரோனா வைரஸ்

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Aishwarya Arjun
Aishwarya Arjun

By

Published : Jul 28, 2020, 4:50 PM IST

Updated : Jul 28, 2020, 10:29 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது.

அந்தவகையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா கரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், "உங்கள் அனைவரிடமும் நான் ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். கடவுளின் அருளால் எனக்கு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துவிட்டது.

உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி. இன்னும் கஷ்டமான காலம் முடிவடையவில்லை. அதனால் எல்லோரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jul 28, 2020, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details