தமிழ் சினிமாவின் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 17ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், மரம் வளர்ப்பதை வலியுறுத்தி வந்த விவேக் நினைவாக பலரும் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
விவேக் நினைவாக மரக்கன்று நட்ட நடிகை ஆத்மிகா! - மரக்கன்றுகளை நட்ட ஆத்மிகா
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகை ஆத்மிகா தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
அந்த வகையில், நடிகை ஆத்மிகாவும் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில், "நடிகர் விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் விவேக் தொடங்கியுள்ளார். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.