தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் தெலுங்கில் கால்பதிக்கும் விஜய் சேதுபதி - 'மைக்கேல்' பட அப்டேட் - latest Cinema news

தெலுங்கில் வெளியான 'உப்பென்னா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றொரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.

vijay sethupathi
vijay sethupathi

By

Published : Aug 27, 2021, 12:21 PM IST

ரஞ்சித் ஜெயக்கொடி நடிகர்கள் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து இயக்கிவரும் படம் 'மைக்கேல்'. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், கரன் சி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகைகள், துணை கதாபாத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ரஞ்சித் ஜெயக்கொடி 'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

'மைக்கேல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 'உப்பென்னா' படத்தில் விஜய் சேதுபதி நடிப்பைப் பார்த்து வியந்த தெலுங்கு திரையுலகம் தற்போது அவரை மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்கவைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையும் படிங்க: ஸ்டைலிஷ் சேதுபதி: வைரலாகும் டிவி நிகழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details