கன்னட மொழியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'மஃப்டி' திரைப்படத்தை சில்லுனு ஒரு காதல் திரைப்படப் புகழ் இயக்குநர் கிருஷ்ணா தமிழில் ரீமேக் செய்கிறார். இதில் கதாநாயகர்களாக சிம்புவும், கெளதம் கார்த்திக்கும் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடைபெற்று வந்தது.
இதனிடையில் சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சிம்புவின் சில பாகங்கள் படமாக்கப்படாமல் கிடப்பில் இருந்ததாக தகவல் வெளியானது.