தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இவர்களால் தான் திரைத்துறையே இயங்குகிறது... தினக்கூலியாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய சிரஞ்சீவி காரு!

சினிமா பணியாளர்கள், குறிப்பாக திரைத்துறையில் தற்போது அதிக ஆதரவு தேவைப்படும் தினக்கூலி பணியாளர்களுக்கு உதவ நாங்கள் Corona Crisis Charity என்ற அமைப்பை ஆரம்பித்திருக்கிறோம். இந்தத் தொழிலாளர்களால் தான் திரைத்துறை இயங்குகிறது என தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Chiranjeevi
Chiranjeevi

By

Published : Mar 28, 2020, 9:39 PM IST

தெலுங்கு திரையுலகின் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி 'கரோனா க்ரைசஸ் சாரிட்டி' (Corona Crisis Charity) என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நிதி திரட்டி வருகிறார்.

உலகப்பெருந்தொற்றான கரோனா இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதனனைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை.

குறிப்பாக திரைத்துறையில் அனைத்துவித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் அதை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்த் திரையுலகில் இந்த பிரச்சனைய சந்தித்து வரும் தொழிலாளர்களுக்கு ஃபெப்சி அமைப்பு குரல் கொடுத்து பிரபலங்களிடம் இருந்து பொருளுதவியும் நிதியுதவியும் பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் இந்த பிரச்சனையை சந்தித்து வரும் தொழிலாளர்களுக்கு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒரு கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். அதுமட்டுமல்லாது சக நடிகர், நடிகைகளும் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரது வேண்டுகோளை ஏற்று பல்வேறு பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். தற்போது இந்த தொழிலாளர்கள் நலனுக்காக சரஞ்சீவி 'Corona Crisis Charity' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இனி அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் இந்த அமைப்பின் வழிகாட்டுதலுடன் செய்யலாம்.

சிரஞ்சீவியின் ட்விட்டர் பதிவு

இது தொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, சினிமா பணியாளர்கள், குறிப்பாக திரைத்துறையில் தற்போது அதிக ஆதரவு தேவைப்படும் தினக்கூலி பணியாளர்களுக்கு உதவ நாங்கள் Corona Crisis Charity என்ற அமைப்பை ஆரம்பித்திருக்கிறோம்.

என் கோரிக்கையை ஏற்று இதுவரை 3.8 கோடி ரூபாய் சேர்ந்திருக்கிறது. இதில் ஜூனியர் என்டிஆர் ரூ. 25 லட்சமும். நாகார்ஜூனா ஒரு கோடி ரூபாயும், மகேஷ்பாபு ரூ. 25 லட்சமும் ராம் சரண் ரூ. 30 லட்சமும் வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த உடனடி தேவைக்கு பங்காற்றுமாறு திரைத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இந்தத் தொழிலாளர்களால் தான் திரைத்துறை இயங்குகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் நிவாரண நிதி, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்த பிரபலங்களுக்கும் சிரஞ்சீவி நன்றி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details