ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1929ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி பிறந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி பர்வதம்மாள், இவருக்கு சிவ ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் என மூன்று மகன்களும் - பூர்ணிமா, லட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர் .
தாளவாடி தொட்டகாஜனூர் பகுதியில் இருந்த ராஜ்குமாருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்குமார், தன் திறமையால் கதாநாயகனாக மாறினார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிபெற, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் என்ற அளவுக்கு வளர்ச்சி அடைந்தார்.
தொட்டகாஜனூரில் ராஜ்குமார் தங்கியிருந்தபோது சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் இரண்டாவது மகன் ராகவேந்திர ராஜ்குமார். இவருக்கு சித்தார்த், யுவராஜ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் யுவராஜ் கன்னட படம் ஒன்றில் நடித்துள்ளார். அவர் தனது நீண்டநாள் காதலி ஸ்ரீதேவியை திருமணம் செய்யவுள்ளார். வருகிற மே 26ஆம் தேதி பெங்களூரு அரண்மனையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது.
யுவராஜ்குமார் திருமணச் சடங்குகள் இந்நிலையில் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தில் தாத்தா ராஜ்குமார் பண்ணை வீட்டில் மணமகன் யுவராஜுக்கு திருமணச் சடங்குகள் செய்யப்பட்டன. அப்போது, யுவராஜ் நடிகர் ராஜ்குமார் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினர். இதில் அவரது நெருங்கிய உறவினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.