அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் 'மண்டேலா'. இயக்குநர் பாலாஜி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ஓபன் விண்டோ புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
ஓடிடியில் வெளியான யோகிபாபுவின் 'மண்டேலா'! - மண்டேலா
சென்னை: யோகிபாபு நடித்துள்ள 'மண்டேலா' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியது.

mandela
படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். மண்டேலா படத்தில் யோகிபாபுவுடன் சங்கிலி முருகன், ஜிஎம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில், நேற்று (ஏப். 4) ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. தற்போது படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று (ஏப்.5) வெளியிடப்பட்டுள்ளது.