நகைச்சுவை நடிகர் விவேக். தனது திரைப்படங்களில் நகைச்சுவை காட்சி மூலம் சமூக கருத்துக்களையும் எடுத்துரைத்து வருகிறார். தற்போது அப்துல் கலாமின் வழித்தோன்றலாக மரம் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
திருக்குறளுடன் ஒப்பீடு - நடிகர் விவேக் நெகிழ்ச்சி! - நடிகர் விவேக்கின் நகைச்சுவை காட்சிகள்
திருக்குறளுடன் தனது நகைச்சுவையை ஒப்பிட்டு வீடியோ போட்ட ரசிகருக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
vivekh
இந்நிலையில் இவரது நகைச்சுவை காட்சி ஒன்றுக்கு டிக்டாக் போன்று பேசி ரசிகர் ஒருவர் வீடியோ செய்திருந்தார். அதனை தனது ட்விட்டரில் பதிவிட்ட ஒரு பெண் கல்வியின் முக்கியத்துவத்தை புரியும் வண்ணம் அருமையாக எடுத்து சொன்னீர்கள் என்று கூறியிருந்தார். இதற்கு நடிகர் விவேக் அந்த பெண்மணிக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் மிக்க நன்றி நான்சி. திருக்குறளையும் எனது நகைச்சுவையையும் ஒப்பிட்டது எனக்கு பெருமை என்று பதிவிட்டுள்ளார்.