தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மரம் நடுவது இத்துடன் நிற்றல் கூடாது தொடர வேண்டும்!' - மரம் நடுதல்

நடிகர் விவேக் விஜய் ரசிகர்களின் செயல்பாடுகளை கண்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

vivek

By

Published : Aug 16, 2019, 8:35 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்தநாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துவருகின்றனர்.

சமீபத்தில் விஜய், 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினருக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்தார். இந்நிலையில், அவரது ரசிகர்கள் மரம் நடுதலை ஆர்வமுடன் செய்துவருகின்றனர்.

#BIGILTreePlantingChallenge

இதற்காக அவர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் '#BIGILTreePlantingChallenge' ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ட்ரெண்ட் செய்தும் வந்தனர். இவர்களின் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் விஜய் ரசிகர்களின் இந்த முயற்சிக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், 'அன்பு விஜய்யின் ரசிகப் பெருமக்கள் மரம் நடுவதில் முனைப்புடன் செயல்படுவது ஆரோக்கியமான ஆரம்பம்! இது இத்துடன் நிற்றல் கூடாது. தொடர வேண்டும்! வாழ்த்துகள்' என்று அவர் கூறியுள்ளார்.

விவேக் ஏற்கனவே 'கிரீன் கலாம்' என்ற அமைப்பை உருவாக்கி, மரம் நடுவது குறித்த தீவிர விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டும் மரக்கன்றுகளை நட்டும்வருவது பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details