உலகின் நுரையீரல் என்று கூறப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த இரண்டு வாரங்களாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசித்துவரும் உயிரினங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன.
மேலும் பிரேசில் நாட்டின் பல பகுதிகள், காட்டுத் தீயால் புகை மூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து உலக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மிகுந்த கவலை தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து ஜிவி பிரகாஷ் சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில்,
நம்மால் அமேசன் காடுகளில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க முடியாது. நம்மால் அமேசானில் பொருட்களை ஆர்டா் செய்யவும் அமேசான் பிரைமில் நிகழ்ச்சியை பார்க்கவும் முடியும். ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் ஒன்றை செய்ய முடியும்.
நாம் இருக்கும் இடத்தில் மரங்களை நடுவதன் மூலம் புதிய அமேசான் காடுகளை உருவாக்க முடியும். அமேசான் காடுகளில் எரியும் தீயை அணைக்க மழைக்கு வேண்டி நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்’ என பதிவிட்டுள்ளார்.