தமிழ் சினிமாவில் 'ஜோக்கர்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதைத் தொடர்ந்து நடிகர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான 'ஆண் தேவதை' படத்திலும் நடித்திருந்தார்.
‘ரம்யா பாண்டியனை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும்’ - நடிகர் விவேக் - ஆண் தேவதை
நடிகை ரம்யா பாண்டியனை தமிழ் சினிமா வரவேற்க வேண்டுமென்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பின் சினிமா வாய்ப்புகள் குறைந்ததையடுத்து போட்டோ ஷூட்டுகளை அவ்வப்போது செய்து வந்தார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகி இளைஞர் மனதை கொள்ளையடித்தது.
இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், பண்பும், அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியன் தன் நடிப்பால் ஜோக்கர், ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதை சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் என்று பதிவிட்டுள்ளார்.