தமிழில் 2014ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திகில் படம் 'அரண்மனை'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து, இரண்டு வருடங்களுக்குப் பின் சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் 'அரண்மனை 2' வெளியானது. இத்திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது.
தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகமான 'அரண்மனை 3' படத்தின் படப்பிடிப்பு நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கேட் அரண்மனையில் தொடங்கியுள்ளது. இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். இதில், ஆர்யா, சுந்தர் சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இருப்பினும் இப்படம் குறித்த எந்த அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடாத நிலையில் படத்தில் நடித்து வரும் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டு லாரி ஓட்டுநர்களை குஜராத்தில் சந்தித்தேன். (அரண்மனை 3 படபிடிப்பின் போது). நெடுஞ்சாலையில் செல்லும் போது உனக்கேது தூக்கங்கள்; இதயத்தில் இருப்பதோ குடும்பத்தின் ஏக்கங்கள்! என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிங்க: 'என்கிட்ட என்ன கேள்வி கேட்கனுமோ.. அதை மட்டும் கேளுங்கள்' - நடிகர் விவேக்